/* */

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!

பெரியபாளையம் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பெரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!
X

பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிமாறபட்ட உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.


தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிவறை உள்ளிட்டவை ஆய்வு செய்து இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி,சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி ராஜவேல், ஏ.இநரசிம்மன்,ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வாசுதேவன்,பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.ஏ.ஆறுமுகம்,ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஷ், பெரியபாளையம் ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

அப்பொழுது மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை கட்டிடத்திற்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும் என மாணவர்களின் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கோரிக்கை விடுத்தார்.இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளின் அறைக்கு சென்று ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு பணிகளை குறித்தும் அவற்றை சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார்.

Updated On: 1 Feb 2024 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...