/* */

இலங்கை தமிழர்களுக்கு ரூ. 6000 வழங்க கோரி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இலங்கை தமிழர்களுக்கு ரூ. 6000 வழங்க கோரி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
X

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மிக்ஜாம் புயல் நிவாரணம் 6000 வழங்க வலியுறுத்தி கொட்டும் மழையில் நனைந்தபடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை தமிழர்கள் 926 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2720 பேர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது இந்த இலங்கை தமிழர்களின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டனர்.அவர்களது வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் சேதம் அடைந்தன.

இவர்கள் சுமார் 30 வருடங்களாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் நிலையில்,கடந்த மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மழை காரணமாக இப்பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது. மேலும் கனமழையின் போது சுமார் பத்து நாட்கள் இலங்கைதமிழர்கள் முகாமைச் சேர்ந்த மக்கள் வீடுகளில் முடங்கினார்கள். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாரம் முழுவதும் நிவாரணத் தொகையாக 6.ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்துக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கிய நிலையில் இலங்கை தமிழர்கள் முகாமில் 50% அடைந்த சுமார் 150 வீடுகளையும் முற்றிலுமாக சேதம் அடைந்த சுமார் 80 வீடுகளையும் கூட அரசு அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் கும்மிடிப்பூண்டி வட்டாரம் முழுவதும் நிவாரணத் தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த 6000 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படாததால் முகாம் நிர்வாகம் சார்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்த நிலையில் கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த இலங்கை தமிழர்கள் முகமை சார்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் குடைகளுடன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பட்டனர்.

மேலும் வட்டாட்சியர் அலுவலகம் வர தாமதமானதால் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிட்டு அமைதியாக சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

Updated On: 7 Jan 2024 8:37 AM GMT

Related News