திருத்தணி அருகே கார் மோதி தண்ணீர் கேன் ஏற்றுச்சென்றவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே கார் மோதி தண்ணீர் கேன் ஏற்றுச்சென்றவர் உயிரிழப்பு
X

உயிரிழந்த அமுதன்.

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கேன் ஏற்றுச்சென்றவர் கார் மோதி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதன் ( வயது 36). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் குடிப்பதற்கு வீட்டிற்கு தேவையான குடிதண்ணீர் கேன் எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த அமுதன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயேல ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மா சத்திரம் போலீசார் சொடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது 4 மாத கைக் குழந்தை உள்ள நிலையில் தனியார் தொழிற்சாலை ஊழியர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai healthcare products