மீன்பிடிக்கச் சென்ற ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Teacher Drowned in Lake
திருத்தணி அருகே மீன் பிடிக்கச் சென்ற பள்ளி ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை அருகே மூர குப்பம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் குமரேசன் (வயது 42) இவர் ஆர்கே பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி பாக்கியலட்சுமி இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் குமரேசன் வீட்டிலே இருந்தார். அவர் ஏரிக்கு சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது இதனால் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மீன் பிடிக்கும் வலையை எடுத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகாமல் உள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார்.
அங்கு வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலை ஏரியில் உள்ள செடி கொடிகளில் மாட்டிக் கொண்டது. எவ்வளவு முயற்சித்து மழை வெளியே வராததால் ஆசிரியர் குமரேசன் தண்ணீரில் இறங்கி வலையை கரைக்கு இழுத்துக் கொண்டு வர முயற்சி செய்தார். ஏரியில் அடர்ந்த சகதி அதிக அளவில் இருப்பதால் குமரேசன் கால்கள் இரண்டும் சேற்றில் பலமாக சிக்கிக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் இன்னும் கால்கள் ஆழமாக சென்றுள்ளது இதனால் குமரேசன் நீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத குமரேசனைத் தேடி அவரது மனைவி கிராமத்தின் சேர்ந்து உறவினர்களை அழைத்து ஏறிக்குச் சென்று பார்த்தார். வலைகள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் குமரேசன் காணவில்லை உடனடியாக அவர்கள் ஏரிக்குள் இறங்கி குமரேசனைத் தேடினர். இது குறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் குமரேசனை தேடினார். இரவு ஆகிவிட்டதால் தேடும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.மேலும் நேற்று காலை முதல் தேடும் பணியை தீவிர படுத்திய பின்னர் குமரேசனை சடலமாக மீட்கப்பட்டார் இது குறித்து ஆர்.கே. பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu