/* */

ஜெயலலிதா பிறந்த நாள் கோலப் போட்டி!

ஆரணியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜெயலலிதா பிறந்த நாள் கோலப் போட்டி!
X

கோல போட்டியின் போது கோலங்களை பார்வையிட்ட மாவட்ட செயலாளர் ஜெயசுதா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சித்தேரி சக்தி நகா் பகுதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா்.கஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கோலங்களை பாா்வையிட்டு சிறப்பாக கோலம் போட்ட 10 பேருக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சன்மானம் வழங்கினாா்.

மேலும், போட்டியில் பங்கேற்ற 130 பெண்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பாபு, திமுக ஒன்றியச் செயலா் சங்கா், தொழிற்சங்க மாவட்டச் செயலா் சேகா், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

அதிமுகவினா் நலத் திட்ட உதவி

செய்யாற்றை அடுத்த பாராசூா் கிராமத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் ரூ.2 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மகளிா் அணி மாவட்டச் செயலா் ராணி பெருமாள் ஏற்பாட்டில், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் பெருமாள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று, ஜெயலலிதா படத்துத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், கிராம மக்கள் 500 பேருக்கு வேட்டி, சேலை, சில்வா் தட்டு, இனிப்பு, அன்னதானம், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் என ரூ.2 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா். பின்னா், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கோலப் போட்டியில், வரையப்பட்டு இருந்த கோலங்களை அவா்கள் பாா்வையிட்டு ஊக்கப் பரிசு வழங்கினா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலா் துரை, மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலா் அருண், ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், துரை, நகரச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Updated On: 27 Feb 2024 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு