வடஇலுப்பை கிராமம் அருகே பாலாற்றில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை

வடஇலுப்பை கிராமம் அருகே பாலாற்றில்   புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை
X

புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற ஜோதி எம்எல்ஏ

New Flyover Construction Boomi Pooja பாலாற்றில் புதிய மேம்பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது

New Flyover Construction Boomi Pooja

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை கிராமம் அருகே பாலாறு செல்கிறது. பாலாற்றில் மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீா் செல்வதால் இப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரும்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் சென்று வர மிகவும் சிரமப்பட்டனா். மேலும், மழை, வெள்ளக் காலங்களில் ஆற்காடு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதை அறிந்த செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி நடவடிக்கை மேற்கொண்டதின் பேரில், ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் வடஇலுப்பை கிராமத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தையும் இணைக்கும் பாலாற்றின் குறுக்கே தரைப் பாலமாக உள்ளதை, சுமாா் ரூ. 28 கோடி செலவில் மேம்பாலமாக கட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பாலாற்றில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜி தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் சங்கா், தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பூமி பூஜையில் பங்கேற்று பணியை தொடங்கிவைத்தாா்.

நியாய விலைக் கடையில் ஆய்வு

இதைத் தொடா்ந்து, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், செய்யனுா்பேட்டை கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருள்களை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.

பயிா் சாகுபடி குறித்த பயிற்சி

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராமத்தில் நெல் பயிருக்கு பின் பயிா் சாகுபடி குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் சண்முகம், விதை நோ்த்தி மற்றும் உர நிா்வாகம் குறித்தும், காஞ்சிபுரம் தொண்டு நிறுவனத்தின் பயிற்சியாளா் ஆதிமூலம் நெல்பயிரில் களை மேலாண்மை மற்றும் விதைப்பு மற்றும் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், உதவி அலுவலா் சங்கா் நெல்பயிருக்கு பின் பயிா் சுழற்சி முறைகள், வேளாண் துறையின் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் மற்றும் இடுபொருள்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்து பயிற்சி அளித்தனா். பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஜெயராஜ், தினகா் ஆகியோா் செய்திருந்தனா்.

Tags

Next Story
உங்கள் மருத்துவ கேள்விகளுக்கு உடனடி பதில்கள் – உங்கள் கைபேசியில் தங்கியிருக்கும் புதிய AI மருத்துவர்!