/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்

College New Buildings Inauguration திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியில் கல்லூரி கட்டிடங்களை காணொளி வழியாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்
X

புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏசரவணன் .

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள நாகப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 4 வகுப்பறை மற்றும் 4 ஆய்வாக கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின், காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நாகபாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கை வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். தொழில்நுட்பத் துறை தலைவர் ராமு, கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

கல்லூரி முதல்வர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது;

இந்த நாகப்பாடி ஊராட்சியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நான் நிகழ்ச்சிக்கு வந்த போது இந்த கல்லூரி முதல்வரும் மற்றும் ஆசிரிய பெருமக்களும், மாணவர்களும் எங்கள் கல்லூரியில் வேதியியல் ஆய்வகம் வேண்டும் மற்றும் இயற்பியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் வேண்டும், மற்றும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த கல்லூரிக்கு உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் , ஆய்வகங்கள் பெற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக நமது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, அவர்களிடமும் , உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும், நான் இந்த கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் நான்கு ஆய்வக கட்டடங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்குண்டான அரசாணையை வெளியிட்டு புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது நான்கு வகுப்பறைகள், நான்கு ஆய்வக கட்டிடம் மற்றும் நான்கு ஆய்வகங்கள், கழிவறை வசதிகள் என அனைத்து கட்டிடங்களையும் இப்போது தமிழக முதல்வர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

அதை இப்போது நாம் உங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும். அதேபோல் தொழில்முறையின் மூலம் மாணவர்கள் நீங்கள் பெரிய அளவில் சாதித்து நமது ஊருக்கும், நமது மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும் பல நல்ல சேவைகளை செய்து அனைவரும் பாராட்டும் விதமாக பெரிய அளவில் சாதிக்க வேண்டும். நமது மாநிலத்தை முன்மாதிரியான மாநிலமாக உருவாக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் ,ஒன்றிய கவுன்சிலர் பவ்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ,அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jan 2024 7:16 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  10. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...