கலசப்பாக்கம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு:எம்எல்ஏ பங்கேற்பு

பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கிய எம் எல் ஏசரவணன் .
School New Building Opening Function
கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள கீழ் செண்பகத் தோப்பு கிராமத்தில் ரூபாய் 33 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்களை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள கீழ் செண்பகத் தோப்பு கிராமத்தில் ரூபாய் 33 லட்சத்தில் புதிய வகுப்பறை, பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி செல்வம் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய செயலாளர் சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார், அப்போது அவர் பேசுகையில்,கீழ் செண்பகத் தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருந்ததாலும் ஏற்கனவே உள்ள பள்ளி கட்டிடம் போதுமான இட வசதி இல்லாததாலும் இப்பகுதிக்கு புதிய பள்ளி கட்டிடம் வேண்டும் என்றும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செண்பகத் தோப்பு பகுதியில் ரூபாய் 33 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தை இன்று தொடங்கி வைத்துள்ளோம்.இந்த பள்ளியில் 30 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டில் இன்னும் அதிக அளவு மாணவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மாணவர்களிடம் பேசிய போது மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பாடம் கற்றுக் கொடுக்கிறார்களா, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியாகவும் சுவையாகவும் முழுமையாகவும் கிடைக்கிறதா என்பதையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து கீழ் செண்பகத் தோப்பு அணை செல்லும் சாலை சரியான முறையில் இல்லாததாலும் அதிக அளவு குண்டும் குழியுமாக உள்ளதாலும் அப்பகுதி மக்கள் புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டி என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படியும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு முயற்சியால் இந்த செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள சாலைகள் , சரி செய்வதற்கும் புதிய சாலைகள் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் சாலை அமைத்துக் கொடுக்கப்படும்.
நிகழ்ச்சியில் தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu