/* */

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை!

பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை துணை சபாநாயகர் வழங்கினார்.

HIGHLIGHTS

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை!
X

பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய துணை சபாநாயகர்  

கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமாசிபாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமாசிபாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளர் அமர வாணி அனைவரையும் வரவேற்றார். ஆவின் மேலாளர்கள் சுகன்யா, பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு குழு உறுப்பினர் காளியப்பன், அட்மா குழு தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 734 பேருக்கு ரூபாய் 8 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கியும் சிறந்த முறையில் பால் விநியோகம் செய்ததற்கு பாராட்டியும் , மேன்மேலும் பால் உற்பத்தியை பெருக்குவதால் அனைவருக்கும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வழி வகுக்கும் எனக் கூறி தனது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவில் சங்க தனி அலுவலரும் செயல் அலுவலருமான தமிழரசி, விரிவாக்க அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிபாலன், விஜயசேகர் மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவின் முடிவில் பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Updated On: 18 Jan 2024 6:16 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?