/* */

வள்ளலார் திருச்சபையின் மகளிர் தின விழா

வள்ளலார் திருச்சபையில் கம்பன் தமிழ் சங்க விழா மகளிர் தின விழா நடைபெற்றது

HIGHLIGHTS

வள்ளலார் திருச்சபையின் மகளிர் தின விழா
X

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய கம்பன் கழக தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வள்ளலார் திருச்சபையின் சார்பில் மகளிர் தின விழா கம்பன் தமிழ் சங்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுப்பிரமணி அடிகளார் தலைமை தாங்கினார். ஆசிரியர் பூங்கொடி அனைவரையும் வரவேற்றார். வள்ளலார் போற்றிய பெண்கள் என்னும் தலைப்பில் மங்கையர்க்கரசி, அபிராமி, குணா ஜெகதீசன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பெண்ணின் பெருமை என்னும் தலைப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள்.

மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் குடும்ப சூழலா, கல்வி சூழலா என்றும் தலைப்பில் லதா பிரபு லிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் மான் விழி, கயல்விழி, கவிஞர் தேவிகா, வனிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

இறுதியில் குடும்ப சூழலே என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

தொடர்ந்து செம்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நல்லாசிரியர் விருது பெற்ற அல்லிராணி அவர்களுக்கு விழாவில் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கம்பன் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் எழுத்தாளர் கவிஞர் சண்முகம் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தெய்வத்திரு வள்ளலார் பற்றிய செய்திகளையும், அருட்பா கருத்துக்களையும் பெருமைகளையும் மாணவர்களிடையே விளக்கி பேசினார்.

விழாவில் ஆசிரியர் ஜெய்சங்கர் , தங்க விஸ்வநாதன் , தமிழ் அறிஞர்கள் , தமிழ் ஆசிரியர்கள் , வள்ளலார் பக்தர்கள், வள்ளலார் திருச்சபையின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Feb 2024 2:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  2. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  7. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  8. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!