பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் இலட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் பெளா்ணமியையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இன்று திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா். பங்குனி மாதப் பெளா்ணமி: பங்குனி மாதப் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை பிற்பகல் 1.16 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்: ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். மாலை 7 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்களில் பலா் அருணாசலேஸ்வரா் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கிரிவல பக்தா்கள் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன. தற்காலிகப் பேருந்து நிலையங்களில் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் நீர்மோர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் ரோட்டில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
எப்பொழுதும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அன்னதானம் வழங்குவது வழக்கம்தான். ஆனால் தற்போது திருவண்ணாமலையில் 100 டிகிரி அடிக்கும் வெயிலில் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில், உடம்பிற்கு எந்த விதமான கெடுதலும் ஏற்படாத வெயிலின் சூட்டை தணிக்கும் நீர் மோர் வழங்கியதால் பக்தர்கள் ,முதியவர்கள், குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் பருகி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu