/* */

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் புகார்

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீது ஊழல் புகார் கூறப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் புகார்
X

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு.

மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு மீது இப்போது மிகப் பெரிய ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இப்படி இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோசமான உறவே கடந்த சில காலமாக நிலவி வருகிறது. இதற்கிடையே அங்கு அதிபராக உள்ள முய்சு மீது மிகப் பெரிய ஊழல் புகார் ஒன்று இப்போது எழுந்துள்ளது. இதனால் அவர் தனது அதிபர் பதவியைக் கூட இழக்கலாம் என்று கூறப்படுகிறது

மாலத்தீவில் அதிபர் முறை ஆட்சியில் இருக்கிறது. அங்குக் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வென்று தான் முய்சு அதிபராகத் தேர்வானார். இந்தச் சூழலில் தான் இப்போது நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கிடையே திங்கள்கிழமை மாலத்தீவு நாணய ஆணையம் மற்றும் மாலத்தீவு போலீஸின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியோரின் சீக்ரெட் ஆவணங்கள் இணையத்தில் கசிந்தன.

அவை அதிபர் முய்சுவின் ஊழலுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் கூறுகையில், "2018ஆம் ஆண்டு தேதியிட்ட இந்த ஆவணங்கள் அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள முறைகேடுகளைக் காட்டுகின்றன.குறிப்பாக 10 பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுகிறார்கள். நிதி மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான புகார்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதைக் கையில் எடுத்துள்ளன. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சீக்ரெட் ரிப்போட்டை ஆதாரமாக வைத்து முய்சுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூட குரல்கள் எழுந்துள்ளன. இந்த ஊழலுக்கு முய்சு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று சாடியுள்ளன.

இது தொடர்பாக மாலத்தீவு எதிர்க்கட்சிகள் கூறுகையில், "முய்ஸுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், முய்சு தான் முன்னிறுத்தும் ராஸ் மாலே மேம்பாட்டுத் திட்டத்தில் மிகப் பெரியளவில் ஊழல் செய்துள்ளார். அதில் அவர் விளம்பரங்களுக்கு மட்டும் மிகப் பெரியளவில் செலவு செய்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

மாலத்தீவில் இந்தளவுக்கு சென்சிடிவ்வான ஆவணம் கசிந்துள்ளது. இதுவே முதல்முறை. இது தொடர்பாக அந்த அமைப்போ அல்லது மாலத்தீவு அரசோ எந்தவொரு விளக்கமும் அல்லது மறுப்பும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க இதை எதிர்க்கட்சிகள் மிகப் பெரிய விஷயமாகக் கையில் எடுத்த நிலையில், நேற்றிரவு முதல்முறையாக முய்சு இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார்.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தங்களைச் சிக்க வைக்க முயல்வதாகவும் இருப்பினும் இல்லாத ஊழலை நிரூபிக்கவே முடியாது என்று முய்சு தெரிவித்துள்ளது. தான் மேயர் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் இதே குற்றச்சாட்டுகள் எழுந்தன என்று கூறியுள்ள முய்சு, எப்படி பொதுமக்கள் இந்த போலி குற்றச்சாட்டுகளை அப்போது நிராகரித்தாரோ அதேபோல இந்த முறையும் நிராகரிப்பார்கள் என்று முய்சு தெரிவித்துள்ளார். மாலத்தீவில் உள்ள 93 இடங்களுக்கு வரும் ஏப்ரல் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை இடங்களைப் பிடித்தால் முய்சுவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 18 April 2024 9:13 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!