/* */

கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

கோவை மோசடி வழக்கில் சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணி புரிந்து வந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்து, 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார், ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களது வங்கி கணக்குகளை முடக்கம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பண மோசடி வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 May 2024 12:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  2. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  4. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  5. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  7. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  8. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  9. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  10. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...