/* */

ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி தெரியுமா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படிக்கலாம்.

HIGHLIGHTS

ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி தெரியுமா?
X

இந்திய அரசின் நிர்வாக அமைப்பில் உயர்ந்த பதவிகள் என்றால் அது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ், ஐஎப்ஓஎஸ் போன்ற பதவிகள் உள்ளன. இதில் ஐஏஏஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது தான் பலரது கனவாக இருக்கும்.. இந்நிலையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகள் மிக உயர்ந்த பதவிகளாக இருந்த போதிலும், கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஐடி நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளை ஒப்பிடும் போது மிக குறைவான சம்பளமே வாங்குகிறார்கள். ஆனால் முன்பை ஒப்பிடும் போது 7வது கமிஷன் அமலுக்கு வந்த பிறகு சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளது.

பள்ளியில் குழந்தையை சேர்க்கும் போதே, தன் மகன் ஐஏஎஸ் ஆக வேண்டும். ஐபிஎஸ் வேண்டும் என்றே பெற்றோர் ஆசைப்படுவார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களை போல் ஐஏஏஸ் ஆகி கலெக்டர் ஆக ஆசைப்படுவோர் அதிகமாக இருக்கிறார்கள். அண்மையில் வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான "12த் ஃபெயில்" திரைப்படத்தில் 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் ஒருவன் கடினமாக உழைத்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறுவார். இந்த கதை ஒரிஜினலாக நடந்த கதை. இந்த படம் வடமாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பின்னர் பலரும் ஐஏஏஸ், ஐபிஎஸ் படிக்க ஆசைப்படுகிறார்கள். ஐஏஏஸ் என்பது இந்திய நிர்வாக அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் உள்ள பதவியாகும்... ஐஏஎஸ் அதிகாரி தான் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஆவார். ஒரு மாவட்டத்தின் கலெக்டர் என்பவர், நீதி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மருத்துவம், நெடுஞ்சாலை என அரசின் அத்தனை துறைகளுக்கும் மாவட்ட ரீதியாக தலைவர் ஆவார். ஒரு மாவட்டத்தில் எந்த துறையில், எந்த பிரச்சனை என்றாலும் மாவட்ட ஆட்சியர் தான் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பானவர் ஆவார். தலைமை செயலாளர் அளவிற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உயர முடியும். தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வரமுடியும். ஒரு மாநிலத்தின் நிர்வாகமும் இவர்கள் கட்டுப்பாட்டில் தான் வரும்..

ஐபிஎஸ் பதவி என்பது ஒரு மாவட்டத்தின் அல்லது ஒரு பெரிய நகரத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ள முக்கியமான பதவியாகும். இவர்கள் ஆரம்ப நிலையில் ஏஎஸ்பியாக பயிற்சி பெற்று சேருவார்கள். அடுத்த கொஞ்ச நாட்களிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக மாவட்ட எஸ்பியாக பணியாற்றுவார்கள். அதன்பிறகு டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என மாநிலத்தின் சட்டம்ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பிற்கு வருவார்கள்..

ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆரம்ப நிலையில் அடிப்படை ஊதியமாக 56100 ரூபாய் கிடைக்கும் அத்துடன் டிஏ, TA, DA மற்றும் HRA ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும். அதேநேரம் வருடம் ஏற ஏற சம்பளம் ஏறிக்கொண்டே செல்லும். அதேபோல் பதவி ஏற ஏறவும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கும். காவல்துறை தலைமை இயக்குனர் என்ற அஸ்தஸ்திற்கு வந்தால் அடிப்படை ஊதியமாக ரூ. 2,05,400 சம்பளம் கிடைக்கும். மத்திய அரசில் சிபிஐ அல்லது உள்துறை இயக்குனர் என்றால் ரூ. 2,23,000 அடிப்படை ஊதியமாக கிடைக்கும். மத்திய அரசில் சிபிஐ அல்லது உள்துறை இயக்குனர் என்றால் ரூ. 2,23,000 அடிப்பைடை ஊதியமாக கிடைக்கும். இதுதவிர அரசு பங்களா, பாதுகாவலர்கள், வீட்டு வேலை செய்ய ஆட்கள், கார், டெலிபோன், இணையதள இணைப்பு, பயணப்படி என அனைத்து சலுகையும் கிடைக்கும்.

Updated On: 28 March 2024 3:49 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!