சென்னை புழல் தண்டனை சிறை குளியலறையில் சிக்கியது பதுக்கல் செல்போன்

சென்னை புழல் தண்டனை சிறை குளியலறையில் சிக்கியது பதுக்கல் செல்போன்
X

சென்னை புழல் மத்திய சிறை (கோப்பு படம்).

சென்னை புழல் சிறை பொது குளியலறையில் சிறைக் காவலர்கள் சோதனையில் பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை புழல் தண்டனை சிறையில் காவலர்கள் திடீர் சோதனையில் கைதிகள் குளியலறையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் தண்டனை சிறைக்குள் கொலை, கடத்தல், பாலியல் பலாத்காரம், கொள்ளை போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்கள் சிறை அதிகாரிகளுக்கு தெரியாமல் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக புகார்கள் வந்தன.

புழல் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அவ்வப்போது சிறை காவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை சிறையில் சிறைக்காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பொது குளியலறையில் மறைத்து வைத்திருந்த செல்போன், பேட்டரி, பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குளியலறையில் செல்போனை மறைத்து வைத்து பயன்படுத்தி வந்தது யார், சிறைக்குள் எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products