/* */

Duplicate Mark Sheet Person Arrest விசா பெற போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஆந்திரா வாலிபர் கைது

Duplicate Mark Sheet Person Arrest அமெரிக்கா செல்ல தூதரகத்தில் போலி சான்றிதழை தயார் செய்து வழங்கிய ஆந்திரா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Duplicate Mark Sheet Person Arrest  விசா பெற போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஆந்திரா வாலிபர் கைது
X

போலி மதிப்பெண் சான்றிதழை   வழங்கிய ஹரிபாபு.

Duplicate Mark Sheet Person Arrest

அமெரிக்க துணை தூதரகத்தில் விசா பெறுவதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்துகொடுத்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24வயதான ஹேம்நாத் என்பவர் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விசா கேட்டு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 16.ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்முகத் தேர்விற்காக ஹேம்நாத் வந்துள்ளார். அப்போது அவரது ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது ஹேம்நாத் அதில் தாக்கல் செய்த பி.டெக் சான்றிதழ்கள் போலியானது என அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

பின்னர் இது குறித்து அமெரிக்க துணை தூதராக அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவன் ஹேம்நாத்தை பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ளார்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ் பேட்டை பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மத்திய குற்ற பிரிவு போலீசார் துணை ஆணையர் செந்தில்குமாரி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்ப்பேட்டைக்கு சென்று ஹரிபாபு(35) என்ற நபரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், அதன் பிறகு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் நோக்கத்தில் ஆந்திர மாநிலம் சொந்த ஊரிலே ECCHO overseas consultancy என்ற பெயரில் அலுவலகம் ஒன்று தொடங்கி நடத்தி வந்ததும். மேலும் வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ் தயார் செய்து கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனை செய்து கம்ப்யூட்டர்கள், ஆர்டிஸ்க்,இரண்டு லட்ச ரூபாய் பணம், பென் டிரைவ்,செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹரிபாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் விசாரணையில் உள்ள மாணவனான ஹேமநாத் என்பவர் மீதும் வழக்கு பதியக்கூட வாய்ப்பு உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Nov 2023 7:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...