முறைகேடு செய்த பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் பணியிட நீக்கம்

முறைகேடு செய்த பள்ளி  தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் பணியிட நீக்கம்
X

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பள்ளிக்கூடம்  (கோப்பு படம்).

செங்குன்றம் அருகே முறைகேடு செய்த பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் விகிதாச்சாரத்தை தவறாக நிர்ணயித்ததில் ஈடுபட்டு அரசுக்கு பெரும் இழப்பை ஈடுபடுத்தியதாக பள்ளியின் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியையின் முறைகேடுகளை கவனித்தாத வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலரையும் பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நெல், அரிசி, ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள், சாட்டை அடிப்பவர்களின் குழந்தைகள், காட்டு நாயக்கன் கோட்டை பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள், சென்னையிலிருந்து புலம் பெயர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளியில் மாணவர்கள் குறைந்ததையடுத்து 566 மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாக கூறிய நிலையில் வெறும் 219 மாணவர்களே பயின்று வருகின்றனர். இதில் கூடுதலாக 167 மாணவர்களுக்கு பள்ளியில் பயின்று வருவது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகமாக பதிவிட்டதாகவும் இதனால் அரசுக்கு அதிக நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி பம்பதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை ஆசிரியையின் முறைகேடுகளை கவனிக்காத வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப் என்பவரையும் தொடக்ககல்வி இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர் சேர்க்கையை கூடுதலாக காட்டி ஆசிரியர் பணியிடங்கள், கூடுதலாக சத்துணவு பொருட்களை பெற்றதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
smart agriculture iot ai