/* */

கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
X

சிபிசிஐடி விசாரணை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ரமேஷ் மற்றும் ஜெயலலிதா கோடநாடு வரும் போது காய்கறிகளை கொடுத்து வந்த கோத்தகிரியை சேர்ந்த தேவன், கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் ரவிக்குமார் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானின் வீட்டிற்கு அருகே வசித்த கார்களுக்கு நம்பர் பிளேட் பணி செய்யும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேரும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலிசார் சம்மன் அளித்தனர். இதன்படி இன்று 4 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 April 2024 9:15 AM GMT

Related News

Latest News

  1. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  2. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  5. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  6. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  7. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  8. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  10. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை