/* */

சேலம் திமுக மாநாட்டில் நாமக்கல்லில் இருந்து 24 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு : எம்.பி. தகவல்

Namakkal news- சேலத்தில் வரும் டிச. 24ம் தேதி நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலிருந்து 24 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பதாக, ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சேலம் திமுக மாநாட்டில் நாமக்கல்லில் இருந்து 24 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு : எம்.பி. தகவல்
X

Namakkal news- நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். அருகில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

Namakkal news, Namakkal news today- சேலத்தில் வரும் டிச. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும், திமுக இளைஞரணி மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலிருந்து 24 ஆயிரம் இளைஞர்கள் சீருடையில் பங்கேற்க உள்ளதாக, ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் முல்லை நகரில் உள்ள, கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதி வந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

சேலம் மாவட்டம், பெத்தநா யக்கன்பாளையத்தில், வரும் 24ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திமுக இளை ஞர் அணியின் 2வது மாநில மாநாடு சறிப்பாக நடைபெற உள்ளது. அண்டை மாவட்டமாக நாமக்கல் இருப்பதால், இங்கிருந்து அதிகப் படியான இளைஞர்களை, கட்சி நிர்வாகிகளை மாநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். விரைவில் மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கான சீருடைகள் வழங்கப்படும். மாநாட்டிற்கு செல்வதற்கான வாகனங்களை சம் பந்தப்பட்ட பகுதி நிர்வாகிகள் உடனடியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண் டும். ராசிபுரம், நாமக்கல், சேந்த மங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் இருந்து 24 ஆயிரம் இளைஞர்கள் வெண் சீருடையில் பங்கேற்க உள்ளனர். இளைஞர் அணியி னர் சிறப்பான முறையில் செயல்பட்டு கட்சி தலைமையிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

செயற்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Dec 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்