/* */

ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!

நாமக்கல் அருகே ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில்   உழவாரப்பணிகள் துவக்க விழா..!
X

நாமக்கல் அருகே ஏ.மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மரக்கன்றுகளை நட்டு, நடைபெற்ற உழவாரப்பணிகளை துவக்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே ஏ.மேட்டுப்பட்டி, ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஏ.மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் (ஏவிஏஏ) உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

உழவாரப்பணி துவக்க விழாவிற்கு, பஸ் அதிபர் தயாளன் தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார், எம்.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, விழாவினை துவக்கி வைத்தனர். இன்ஜினியர் மாணிக்கம், காசி விநாயகர் கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, கோயில் அர்ச்சகர் பிச்சுமணி அய்யர், கோயில் அறங்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உழவாரப்பணியை துவக்கி வைத்தனர்.

கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன் ராமர் கோயில் தல வரலாறு குறித்துப் பேசினார். நாமக்கல் அர்பன்பேங்க் பொது மேலாளர் ராமலிங்கம், பழனிசாமி, கண்ணன், சந்திரசேகரன், பூபதி, செல்வகுமார், பக்தப் பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கோயிலை சுற்றிலும் சுத்தம் செய்து உழவாரப் பணியில் ஈடுபட்டனர். முடிவில் அருணாசலம் நன்றி கூறினார்.

Updated On: 27 April 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...