/* */

திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
X

திருவண்ணாமலையில் திடீர் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று புதன்கிழமை காலை ஒரு மணி நேரத்திற்கும் குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது.

அதுவும் இப்பொழுது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் 108 டிகிரியை தாண்டியுள்ளது.

பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை. கோடை மழை வருமா அல்லது வெயிலின் தாக்கம் தணியுமா என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை காலை 3 மணிமுதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, அணைக்கரை, கட்டாம்பூண்டி, தச்சம்பட்டு ஆகிய இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி , வந்தவாசி, போளூர், கண்ணமங்கலம், ஜவ்வாது மலை என பரவலாக இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழை காரணமாக கோடை வெயிலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. அப்போது திடீரென பலத்த ஒளியுடன் இடி விழுந்தது. அதில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு காலை 9 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவசிதிக்குள்ளானார்கள். அதேபோல் நேற்று மாலை மற்றும் இரவு வேலைகளில் லேசாக தூறல் மழை பெய்தது இதனால் குளிர்ந்த காற்று வீச துவங்கியது.

Updated On: 9 May 2024 1:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  3. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  4. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  5. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  6. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  7. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  8. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  9. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  10. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...