/* */

மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு

கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி, மிருகண்டா அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
X

போளூர் மஞ்சள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் 2 மாதங்களுக்கு முன்பே வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும், 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரத்துக்கு முதல் மூன்று நாட்களில் 110 டிகிரியை தாண்டியது. இந்த நிலை தற்போது நீடித்து வருவதுடன், வெப்ப அலையின் தாக்கமும் மக்களை அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை காட்டிலும் 3டிகிரி முதல் 5டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது.

கலசப்பாக்கத்தில் 27 மி.மீ.மழை

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கனமழை பெய்தது. அணியாலை, காம்பட்டு, பூண்டி, மேலாரணி, வில்வாரணி, சோழவரம், மட்டவெட்டு, பட்டியந்தல், சிறுவள்ளூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 7 மணி வரை விடாமல் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. காலை 7 மணி நிலவரப்படி கலசப்பாக்கத்தில் 27 மி.மீ.மழை பதிவானது.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கலசபாக்கம் பகுதியில் நெல் அறுவடை செய்த விவசாயிகள் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாததால் பாதுகாப்பற்ற முறையில் நெல் மூட்டைகளை தங்கள் வீடுகளில் அருகாமையில் திறந்தவெளியில் மூட்டை மூட்டையாக வைத்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி பகுதியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது வேதனைக்குள்ளாக்கியது.

மிருகண்டா அணை

மேலும் கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையின் மொத்த கொள்ளளவு 22.97 அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 8 அடியாக உள்ள நிலையில், தொடர்ந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கோடை மழை நீடித்தால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையால் தென்னை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தவித்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த மழை சற்று குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

போளூா் பகுதியில் மழையளவு 25.2 மி.மீ.

இந்த திடீா் மழையால் ஜவ்வாதுமலை மலை அடிவாரத்தில் உருவாகும் மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்தது. இந்த ஆறு அத்திமூா் கிராமத்தின் வழியாக பெரியகால்வாய் மூலம்,ராமாபுரம், மாம்பட்டு, போளூா் பெரிய ஏரி வரை வந்து சேரும். மஞ்சள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். போளூா் பகுதியில் மழையளவு 25.2 மி.மீ. பதிவானது.

Updated On: 9 May 2024 1:53 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  2. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  3. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  4. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  5. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  10. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்