/* */

நாமக்கல் கோட்ட தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம்

Namakkal news- நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் கோட்ட தபால் அலுவலகங்களில்  தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம்
X

Namakkal news- நாமக்கல் கோட்ட தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம் (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருவர் ஒரு கிராம் முதல், 4,000 கிராம் வரை தங்க பத்திரங்களை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 2.5 சதவீதம் ஆண்டு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும், முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இந்த திட்டம் டிச. 18 முதல் 22ம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுகிறது. இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 20 நாட்களுக்கு பிறகு தங்க பத்திரம் வழங்கப்படும்.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை தொடர்புகொள்ளலாம். அவ்வாறு அலுவலகம் செல்ல இயலாதவர்கள், வணிக வளர்ச்சி அலுவலர்களான சிவக்குமார் (9894112154), சங்கர் (9042855559) ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண்., பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு மிகவும் அவசியம். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தங்கப் பத்திர திட்டத்தில் 100 கிராம் ரூ. 2,68,400 முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 8 ஆண்டுகள் முடிந்து ரூ 6,13,200 முதிர்வுத் தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அவர்களுக்கு ரூ. 53,680 வட்டியாக வழங்கப்பட்டது. எனவே பொதுமக்கள் அனைவரும் அதிக லாபம் தரக்கூடிய அஞ்சலக தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Dec 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி