/* */

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

பெரியூர் ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயிலில் வரும் மே. 19ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

பெரியூர்  மருதகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
X

பெரியூர் ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் பொதுக்குழு கூட்டத்தில் பேசும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் 

பெரியூர் ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிசேக விழாவை, மே 19ம் தேதி நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, பெரியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மருதகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் தூரன் குலம் மற்றும் பண்ணை குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். மேலம் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இக்கோயிலின் குடிப்பாட்டுதாரர்கள் ஆவார்கள்.

பழமை வாய்ந்த இந்த கோயில் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்பட்டதால், இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுடன், கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோயில் முன்புறம் 3 நிலைகளிகளில் ராஜகோபுரம், மூலவர் தங்க கோபுரம் மற்றும் பரிவார தொய்வங்களுக்கான கோபுரங்கள் மற்றும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் இக்கோயில் திருப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

தற்போது திருப்பணிகள் முடிவடையும் நிலையில், கோயில் குடிப்பாட்டுதாரர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் திருப்பணிக்குழு தலைவர் பாலசுப்பிரமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் மாரப்பன், பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற மே மாதம் 19ம் தேதி காலை 7.25 மணிக்கு கும்பாபிஷேசேக விழாவை சிறப்பாக நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் கும்பாபிஷேக விழாவிற்காக, இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய நதிகள் அனைத்தில் இருந்தும் தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டும், மேலும், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து, பிரமாண்டமான யாகசாலை பூஜைகளை நடத்துவது என்றும் யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பின் மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கவும், பல்வேறு வகையான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தனித்தனி குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திரளான தூரன் குலம் மற்றும் பண்ணை குல குடிப்பாட்டு மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Feb 2024 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...