/* */

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

பள்ளி வாகனங்களை 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
X

பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ் பி

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 2024-2025. ஆம் ஆண்டிற்கு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களை மாவட்ட அளவிலான குழு கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவட்ட அளவிலான குழுவில் உள்ள வருவாய் கோட்டாட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துணை கண்காணிப்பாளா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோா் பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 129 பள்ளிகளைச் சேர்ந்த 730 வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது. ஒருசில வாகனங்களில் முதலுதவிப் பெட்டி பராமரிக்கப்படவில்லை. எனவே, அவற்றை சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள், மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். தணிக்கை சான்று பெறாத வாகனங்கள், தொடர்ந்து இயக்க அனுமதியில்லை. பள்ளி குழந்தைகளுடன் செல்லும்போது 50 கிமீ வேகத்துக்கு அதிகமாக சென்றால், வாகனம் பறிமுதல் செய்வதோடு, உரிமம் ரத்து செய்யப்படும்.

வாகனத்தின் நிறம், வாகனங்களின் தரம், இயக்கும் நிலையில் உள்ளதா, விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா, கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதா, காமிரா செயல்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தடுக்கும் விதமாக தீத்தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, அவசர கால சிகிச்சை அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலனஸ் மூலமாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீயணைப்புத்துறையின் மூலமாக செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் பழனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா் சி.வீரமணி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 10 May 2024 1:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு