/* */

நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..? அடேங்கப்பா..!

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் இதுவரை பல கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..? அடேங்கப்பா..!
X

கோப்பு படம் 

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால், இதுவரை ரூ. 21.12 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளில் கடந்த 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் பேரில், நிலையான கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் இதுவரை உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரொக்கப்பணம் ரூ. 19,70,775, பரிசுப்பொருட்கள் ரூ. 6,20,47,466, ரூ. 4,480 மதிப்பிலான மதுபானங்கள் உள்ளிட்ட ரூ. 6 கோடியே 40 லட்சத்து, 22 ஆயிரத்து 721 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், ரொக்கப்பணம் ரூ. 13,38,470, ரூ. 15,25,81,920 மதிப்பிலான தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 15,39,20,320 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் ரொக்கப்பணம் ரூ. 57,05,950 பறிமுதல் செய்யப்பட்டது. பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் ரொக்கம் ரூ. 46,99,440, ரூ. 4,52,970 மதிப்புள்ள தங்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் என மொத்தம் ரூ. 51,52,410 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்செங்கோடு சட்டபை தொகுதியில் ரொக்கம் ரூ. 12,69,850, ரூ. 7,500 மதிப்பிலான மதுபானங்கள் உட்பட ரூ. 12,77,350 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் ரொக்கம் ரூ. 8,03,050, ரூ. 3,77,970 மதிப்பிலான பரிசுப்பொருட்கள், என மொத்தம் ரூ. 11,81,020 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து ரொக்கம் ரூ. 1,57,87,535, தங்கம் மற்று பரிசுப் பொருட்கள் ரூ. 21,54,60,326, மதுபானங்கள் ரூ. 11,980 உள்ளிட்ட மொத்தம் ரூ. 23 கோடியே 12 லட்சத்து, 59 ஆயிரத்து 841 மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட தேர்தல் உதவி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்