/* */

நாமக்கல்லில் அறிவுசார் மையத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த முதல்வர்

Namakkal news- நாமக்கல்லில் ரூ. 2 கோடி மதிப்பில் அறிவுசார் மையத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் அறிவுசார் மையத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த முதல்வர்
X

Namakkal news- நாமக்கல்லில் ரூ. 2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அறிவு சார் மையத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் நகரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, முல்லை நகரில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவு சார் மையத்தில், டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள், கலை இலக்கியம், நாவல்கள் உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளர். மேலும், மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் கம்ப்யூட்டர் நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்வகையில் அனைத்து நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகள் இல்லாமல் போட்டித்தேர்வுக்கு படிப்பவர்களும், பொதுமக்களும் அமைதியாக அமர்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை, சென்னையில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி நாமக்கல் அறிவு சார் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Jan 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...