/* */

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு

திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
X

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் 39 பேர்கள் சார்பாக ஆதரவாளர்களும், வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த டி.எம்.செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதியில் என இரண்டு இடத்தில் வாக்கு இருப்பதாக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதற்கான உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி தற்காலிகமாக செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டிஎம்.செல்வகணபதிக்கு அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் புகாரிற்கு விளக்கம் அளிக்க 3 மணி வரை அவகாசம் கேட்ட நிலையில் இரண்டு மணி வரைக்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவகாசம் கொடுத்தார். இந்தப் புகார் குறித்து உரிய விளக்கம் எழுத்துப்பூர்வமாக திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டிஎம்.செல்வகணபதி வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தங்கள் தரப்பு விளக்கத்தை செல்வகணபதியின் வழக்கறிஞர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தனர். இதையடுத்து திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளில் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் திமுக மூத்த வழக்கறிஞர் விடுதலை அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, செல்வகணபதி அவர்களின் மனு ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர்கள் செல்வகணபதி அவர்களின் பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்றும், இது தவிர அவர் மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து முழுவதும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்து, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய தெரிவித்திருந்தனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, உரிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினோம். சேலம் மேற்கு தொகுதியில் இருந்து வீடு மாற்றும் போதே ஏற்கனவே நீக்கல் படிவம் அவர் கொடுத்துள்ளார்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் முன்வைத்து பேசினோம். எனவே அதனை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும் சொத்து தொடர்பாக நாங்கள் ஏதும் மறைக்கவில்லை என்று தெரிவித்து அதற்குரிய ஆவணங்களையும் வழங்கி இருந்தோம். இதனை ஏற்று தேர்தலில் போட்டியிட வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என திமுக வழக்கறிஞர் விடுதலை செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறும் போது, வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதன் பிறகு எதுவாக இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகுதான் நீதிமன்றம் சென்று அணுக முடியும் என்றார்.

Updated On: 28 March 2024 3:48 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!