/* */

Dmk Students Wing Seminar திமுக மாணவர் அணி கருத்தியல் பயிலரங்கம் :எம்.பி. ராசா பேச்சு

Dmk Students Wing Seminar தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் 2 - வது நாளாக நடைபெற்றது.

HIGHLIGHTS

Dmk Students Wing Seminar  திமுக மாணவர் அணி கருத்தியல்   பயிலரங்கம் :எம்.பி. ராசா  பேச்சு
X

திமுக மாணவரணி சார்பில் அமைப்பாளர் துணை அமைப்பாளருக்கான கருத்தியல் பயிலரங்கத்தில் எம்.பி. ராசா பேசினார். 

Dmk Students Wing Seminar

குற்றாலத்தில் தி.மு.க. மாணவர் அணியின் தெற்கு மண்டல மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான மூன்று நாள் கருத்தியல் பயிலரங்க கூட்டம் தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் நேற்று முதல் தொடங்கியது. 2வது நாளான இன்று பயிலரங்கத்தை கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ. தலைமையேற்று, வரவேற்று பேசினார்.

கருத்தியல் பயிலரங்கத்தின் முதல் அமர்வில்,கழக மாணவர் அணி துணைச் செயலாளர் பி.எம். ஆனந்த் நெறியாளராக நிகழ்வினை தொகுத்து வழங்க, “திராவிட இயக்கமும், கல்விக் கொள்கையும்" எனும் தலைப்பில் தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வகுப்பு எடுத்தார்.

இரண்டாம் அமர்வில், கழக மாணவர் அணி இணைச் செயலாளர் சி. ஜெரால்டு நெறியாளராக நிகழ்வினை தொகுத்து வழங்க, “இன்றைய அரசியலில் திராவிடத்தின் தேவை” எனும் தலைப்பில், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ. ராசா அவர்கள் வகுப்பு எடுத்தார்.

மூன்றாம் அமர்வில், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் பூர்ண சங்கீதா நெறியாளராக நிகழ்வினை தொகுத்து வழங்க, "திராவிட இயக்கமும் சமூகநீதியும்" எனும் தலைப்பில் புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் வகுப்பு எடுத்தார். நான்காம் அமர்வில், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் பொன்ராஜ் நெறியாளராக நிகழ்வினை தொகுத்து வழங்க, "திராவிடஇயக்கமும் கலைத்துறையும்" எனும் தலைப்பில் போராசிரியர் சுப. வீரபாண்டியன் வகுப்பு எடுத்தார்.

பயிலரங்கத்தில் மாநில மாணவரணி நிர்வாகிகள், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Updated On: 26 Nov 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...