/* */

போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன

HIGHLIGHTS

போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப்பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ஆம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு 07.01.2024 அன்று நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி இளங்கலை பட்டப் படிப்பு மற்றும் B.Ed- படித்திருக்க வேண்டும்.மேலும், TET இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இம்மாதத்தில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒருமணி நேரத்திற்கு ரூ.800/- ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு Power Point Presentation (PPT) மற்றும் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்து தரவேண்டும். எனவே, விருப்பமுள்ள பயிற்றுநர்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளின் படிhttps://forms.gle/8gtEn9XDPfscbUgC7என்றபடிவத்தை (Google Form) பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

1.போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றவர்கள்.

2.தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

3.விண்ணப்பித்த பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக் குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் PPT ஆகியவற்றை உடன் எடுத்து வரவேண்டும்.

4.மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப் படம், சுய விவரகுறிப்பு (Resume) மற்றும் கல்வி சான்று நகல்களுடன் 15.11.2023, 16.11.2023 மற்றும் 17.11.2023 ஆகிய மூன்று நாட்களில் அலுவலக நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04362-237037 / 9499055905. -ஆகிய அலுவலக தொலைப் பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 13 Nov 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...