/* */

Voterlist Correction Special Camp தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

Voterlist Correction Special Camp தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்களில் பொதுமக்கள் படிவங்கள் அளித்து பலன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Voterlist Correction Special Camp  தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை   வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி (கோப்பு படம்).

Voterlist Correction Special Camp

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணியானது 27-10-2023 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர்.

மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மாவட்டத்தில் 4-11-2023 (சனிக்கிழமை) 5-11-2023 (ஞாயிற்றுக் கிழமை)18-11-2023 (சனிக்கிழமை)19-11-2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான படிவங்கள் படிவம்-6 புதிய வாக்காளராக பதிவு செய்வதற்கு (2024 ஜனவரி-1 அன்று அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தியாகி இருந்தால்), படிவம் -6 ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்- 6பி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கு படிவம் 7, பெயரினை நீக்கம் செய்வதற்கு (இறப்பு, இரட்டைபதிவு) படிவம் -8 முகவரி மாற்றம் (ஒரே தொகுதிக்குள் மற்றும் தொகுதி மாற்றத்திற்கு) வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் பிழை இருப்பின் பதிவுகளை திருத்தம் செய்வதற்குஃநகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்குஃமாற்றுத்திறனாளி வகைப்பாட்டினை பதிவு செய்வதற்கு மனு அளிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை வாக்குசாவடி அமைவிடங்களில் சம்பந்தப்பட்ட படிவங்கள் அளித்து பலன் பெறலாம். வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் படிவங்கள் பெறுவதற்கும் பூர்த்தி செய்யவும் உதவி செய்வர் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் https://voters.eci.gov .in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline App என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம் கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Nov 2023 7:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்