/* */

சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை

Tirupur News- அவிநாசி பகுதிகளில் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

HIGHLIGHTS

சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
X

Tirupur News- அவிநாசி பகுதிகளில் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள், கலெக்டரிடம்  மனு அளித்தனா்.

Tirupur News,Tirupur News Today- அவிநாசி, கானூா், கருவலூா், சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியா் கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மின்பகிா்மான அவிநாசி, கானூா், கருவலூா், சேவூா் உள்ளிட்ட கிராமங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் இப்பகுதி விவசாயிகளின் வாழை, தென்னை, கரும்பு, காய்கறி, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் முற்றிலும் கருகி நிலை உருவாகி உள்ளது. மேலும், தற்போது கொடுத்து வரும் குறைந்தழுத்த மின்சாரமும் சீரான முறையில் வழங்கப்படுவதில்லை.

பல இடங்களில் கடன் பெற்று பயிா் செய்து அறுவடைக்கு தயாராக உள்ள பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச மின்சாரம் விநியோகம் இல்லாதது வேதனையளிக்கிறது. எனவே விவசாயிகளின் உரிமையான மின்சாரத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும்.

8 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் தற்போது 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே குறைந்த அழுத்தம் மின்சார விநியோகத்தை சீா் செய்ய வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

Updated On: 30 April 2024 4:31 AM GMT

Related News