/* */

உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!

Tirupur News,Tirupur News Today - திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டார பகுதியில் காணப்பட வேண்டிய முக்கிய 7 இடங்களை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

HIGHLIGHTS

உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
X

Tirupur News- உடுமலை பகுதியில் காண வேண்டிய இடங்கள் (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் நீங்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமல்ல இயற்கை எழில் கொஞ்சும் மனதுக்கு அமைதி கிடைக்கும் ஒரு அற்புதமான 7 இடங்களின் தொகுப்பு. இந்த ரம்யமான இடங்களுக்கு சென்றால் ஏகாந்தமான ஒரு சூழலை ரசித்து மகிழலாம்.


திருமூர்த்தி மலை

உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்களில் முதலில் பார்க்க வேண்டியது திருமூர்த்திமலை தான். உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமூர்த்தி அணை, சிறுவர்கள் நீச்சல் குளம், சிறிய பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு திருமூர்த்தி மலைக்கு பெருமையை சேர்க்கிறது.


அமராவதி அணை

அமராவதி அணை உடுமலையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை சுமார் 100 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. அதில் ஏறி மேலே சென்று இயற்கையை ரசித்தால் உங்கள் அணைத்து கவலைகளும் பறந்து ஓடி விடும். அருகிலேயே முதலை பண்ணை, பெரிய பூங்கா, மீன் கடைகள் எல்லாம் உங்கள் பொழுதை மேலும் அழகாக்கும். இந்த இடத்திற்கு வர பேருந்தை விட சொந்த வாகனம் சரியாக இருக்கும்.


தூவானம் அருவி

தூவானம் அருவி சின்னாரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு சென்று தங்கவும் முடியும். காட்டுக்குள் தங்குவது மற்றும் அருவியில் குளிப்பதற்கு என அனைத்திற்கும் கேரள வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.


முதலை பண்ணை

அமராவதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் முதலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு சுமார் 100 முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கே சொந்த வாகனங்களில் செல்வது தான் சிறப்பானது. ஏனெனில் பேருந்து வசதி அமராவதியில் இருந்து மிகவும் குறைவாகவே உள்ளது.


உடுமலை திருப்பதி கோவில்

உடுமலையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உடுமலை திருப்பதி 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்டு மிக பிரம்மாண்டமான அளவில் திறக்கப்பட்டது. பின், உடுமலையில் ஒரு மிக முக்கியமான கோவில் தலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கல்லாபுரம்

கல்லாபுரம் மிகவும் செழிப்பான மற்றும் இயற்கையான கிராமம். உடுமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல்லாபுரத்தை காண அமராவதி வழியாகவும் வரலாம். இங்கு பெரிதாக சுற்றுலா தளங்கள் எதுவும் இல்லை எனினும், இந்த ஊரை சுற்றியுள்ள அணைத்து இடங்களும் நம் கண்ணிற்கு கொள்ளை அழகை தரும்.


காந்தளூர் அருவி

சின்னாரை அடுத்துள்ள மறையூரில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் உள்ள சென்றால் மிகவும் அமைதியான மற்றும் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் அருவி கேரள எல்லைக்கு உட்பட்டது. இந்த அருவி அதிகம் யாருக்கும் தெரியாத காரணத்தால் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

Updated On: 29 April 2024 2:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்