/* */

அடகு கடையில் 250 சவரன் நகை திருட்டு

250 jewelery stolen from pawn shop பொன்னேரி அருகே திரு வேங்கடபுரம் பகுதியில் உள்ள அடகு கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் 250 சவரன் நகை திருடி சென்றார்.

HIGHLIGHTS

அடகு  கடையில் 250 சவரன் நகை திருட்டு
X

250 jewelery stolen from pawn shop

பொன்னேரி அருகே அடகு கடையில் இருந்து 250 சவரன் நகைகளை ஊழியரே திருடி சென்றதாக கடை உரிமையாளர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தானுக்கு தப்பி சென்ற ஊழியரைக் கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த கன்யாலால் (59) என்பவர் திருவேங்கடபுரம் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ்வியாஷ் ( வயது 50) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கன்யாலாலுக்கு சர்க்கரை வியாதி காரணமாக அண்மைக் காலமாக சுரேஷ்வியாஷ் கடையை கவனித்து வந்துள்ளார். கடந்த மாதம் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சுரேஷ்வியாஷ் கடையின் சாவியை ஒப்படைத்துவிட்டு ராஜஸ்தான் சென்றுள்ளார். அதன்பிறகு சுமார் 2019 முதல் 2024 வரையிலான கணக்குகளை பார்த்தபோது கடையில் சுமார் 2000கிராம் (250 சவரன்) காணாமல் போனது தெரிய வந்தது.

இதுகுறித்து கடை ஊழியர் சுரேஷ்வியாஷை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போது நகைகளை கேட்டால் தற்கொலை செய்து கொள்வார் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமது கடையில் இருந்து 2000கிராம் நகைகளை கையாடல் செய்த ஊழியர் சுரேஷ்வியாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தருமாறு கன்யாலால் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் ராஜஸ்தானுக்கு தப்பி சென்ற ஊழியர் சுரேஷ்வியாஷை கைது செய்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுக, சிறுக நகைகளை திருடி விற்றுவிட்டாரா, அல்லது வேறு எங்கேனும் அடமானம் வைத்துள்ளாரா, புதியதாக கடை தொடங்கினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி அடகு கடையில் சிசிடிவி இல்லாததால் உண்மையிலேயே 2000கிராம் நகைகள் திருடு போயுள்ளதா எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 5 March 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி