/* */

பொன்னேரியில் கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்த 7 பேர் கைது

பொன்னேரியில் ஆயுதங்களுடன் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பொன்னேரியில் கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்த 7 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட ரவுடிகள்

பொன்னேரியில் ஆயுதங்களுடன் கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கி இருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் கும்பல் ஒன்று சதேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

இதனையடுத்து கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த முரளி (வயது 28), அரக்கோணத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 20), திருநெல்வேலியை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 24), செங்கல்பட்டு சேர்ந்த பிரகாஷ் (வயது 19), செங்கல்பட்டு சேர்ந்த முகிலன் (வயது 22), பொன்னேரியை சேர்ந்த அகத்தீஸ்வரன் (வயது 21), செங்கல்பட்டு சேர்ந்த 15.வயது சிறுவன் என 7பேரை கைது செய்து பொன்னேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘

மேலும் இதில் தொடர்புடைய 3.பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் யாரை கொலை செய்வதற்காக வந்தார்கள்? அந்த நபர் யார்? அவரும் ரவுடி தானா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 27 Nov 2023 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு