/* */

சென்னை அருகே மீஞ்சூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்

Meenchur NTK Meeting மீஞ்சூரில் ஆளும் திமுக அரசின் செயலற்ற தன்மை குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னை அருகே மீஞ்சூரில் நாம் தமிழர்   கட்சி சார்பில் பொதுக்கூட்டம்
X

இடும்பாவனம் கார்த்திக். 

Meenchur NTK Meeting

பாகுபலி பரமக்குடியில் பிறந்தான் என கூறுவது எப்படியோ, அப்படியே ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பது. எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் பாஜக எடுபடாது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக். தமிழ்நாடு முழுவதும் மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே நீட் தேர்வு விலக்கு சாத்தியம் எனவும் பேச்சு.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆளும் திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைக்கேற்றது. இதில் அக்கட்சியின் மணிலா இளைஞரணி பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது ராமர் கோவில் கட்டி திறத்து விட்டதால் மட்டுமே நாடு சுபிட்சமாக இருக்கும் என கூறி வருவதாக தெரிவித்தார்.

பாகுபலி பரமக்குடியில் பிறந்தான் என கூறிவுது எப்படியோ, அப்படியே ராமன் அயோத்தியில் பிறந்தான் என இவர்கள் கூறுவது என்றார். ராமன் மனிதனே கிடையாது எனவும், இதிகாச பாத்திரம் மட்டுமே என தெரிவித்தார். புல்வாமா தாக்குதல் நடத்தி அதனை வைத்து 2019ல் மோடி வென்றார் எனவும், 2021ல் பாஜக வேட்பாளர்கள் மோடி, அமித்ஷா படங்களை தவிர்த்து வாக்காளர்களை சந்தித்ததாக கூறினார். எந்த காலத்திலும் பாஜக தமிழ்நாட்டில் எடுபடாது என திட்டவட்டமாக தெரிவித்தார். நீட் நுழைவு தேர்வை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். 5கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனவும், குடியரசு தலைவர் ஒருவரது கையெழுத்து மட்டுமே தற்போதையை தேவை என தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே நீட் தேர்வு விலக்கு சாத்தியம் என தெரிவித்தார். மெரினாவை திறந்து மக்களுக்கு அழைப்பு விடுங்கள் எனவும், அரசியல் நெருக்கடியால் மத்திய பிஜேபி அடிபணியும் என்றார். ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும், எதிர் கட்சியாக இருக்கும் போது வேறு ஒன்று பேசுகிறார்கள் என திமுக அரசை சாடினார். தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த போதும் ஒருவரும் உதவ முன்வரவில்லை எனவும், 5லட்சம் பேருக்கு ஒரே இடத்தில் உணவு தயாரிக்க முடியுமென்றால் சென்னை வெள்ளத்திற்கு உணவு தயாரித்து கொடுக்காதது ஏன் எனவும் திமுகவிற்கு கேள்வி எழுப்பினார்.

மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறுகிறார்கள் என சாடினார். வெள்ள பாதிப்பால் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பாதிக்கப்பட கூடாது என மறைத்தனர் எனவும் விளம்பர, வாக்கு, அடையாள அரசியல் என்றார். மக்கள் போராடியது நீட் விலக்கு, மதுவிலக்கு வேண்டும் எனவும் ஆனால் கொடுத்தது காமாட்சி விளக்கு என்றார். அதிமுக ஆட்சியில் மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய திமுக, தற்போது ஏன் மூடவில்லை எனவும் டாஸ்மாக்கில் தற்போது பால்கோவா விற்பனை செய்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கி சந்தி சிரிப்பதாகவும், இன்னமும் கோபாலபுரத்தில் மட்டுமே கொள்ளை நடைபெறவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும் குற்றம் சாட்டினார். கோ பேக் மோடி என கூறிய இதே திமுக தான் தற்போது மோடியை வரவேற்றது எனவும்,14 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கான உரிமைகளை மீட்கவில்லை என்றார். தற்போது திமுக சார்பில் 1 அமைச்சர் புழலில் உள்ளார், மற்றொரு அமைச்சர் எப்போது சிறை செல்வார் என தெரியவில்லை எனவும் இடும்பாவனம் கார்த்திக் பேசினார்.

Updated On: 30 Jan 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்