/* */

புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற இருவர் மீது வழக்குப்பதிவு

புழல் சிறையில் பார்வை நேரத்தில் கைதிகளுக்கு கஞ்சா கொடுக்க முயன்றதாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற இருவர் மீது வழக்குப்பதிவு
X

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

முற்பகல் நேரத்தில் பார்வையாளர்கள் சிறை கைதிகளை நேர்காணல் அறையில் சந்தித்து பேசுவது வழக்கம். நேர்காணல் அறையில் கைதி ஒருவரை சந்தித்து விட்டு புறப்பட முற்பட்ட பார்வையாளர் ஒருவர் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலத்தை தூக்கி கைதியை நோக்கி வீசியுள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்ததில் சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 15கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பார்வையாளர் மணிராஜ், அடிதடி வழக்கில் சிறையில் இருக்கும் விசாரணை கைதி சௌந்தருக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் விசாரணை கைதி சௌந்தர், அவருக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற பார்வையாளர் மணிராஜ் ஆகிய இருவர் மீதும் 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புழல் சிறையில் உள்ள கைதிக்கு பொட்டலம் மூலம் கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Nov 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...