/* */

தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஆந்திரா அமைச்சர் ரோஜா அறிவிப்பு

தமிழக எல்லை ஆரம்பாக்கம் அருகே ஆந்திரா தடா பகுதியில் சுற்றுலா ரிசார்டை ஆந்திரா சுற்றுலா அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக  ஆந்திரா அமைச்சர் ரோஜா அறிவிப்பு
X

தமிழக எல்லை ஆரம்பாக்கம் அருகே ஆந்திரா தடா பகுதியில் சுற்றுலா ரிசார்டை ஆந்திரா சுற்றுலா அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்.

ஆந்திராவில் வரும் சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் தமிழக எல்லை ஒட்டி உள்ள ஆந்திர மாநிலம் தடா அடுத்த பீமராவ்பாளையத்தில் ஆந்திர மாநில சுற்றுலா துறை சார்பில் புலிகட் லேக் வியூ ரிசார்ட்டை சுற்றுலா துறை அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர சுற்றுலா துறை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும், அரசுக்கு வருவாயையும் வழங்கும் ஒரு அமைப்பு எனவும், இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் 3-வது மாநிலமாக ஆந்திரா உள்ளதாகவும்,

சுற்றுலாத் துறை மாநிலத்தின் தனித்துவமான வருமான ஆதாரமாக உள்ளதாகவும், வரும் சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,

கூட்டணி குறித்து தெளிவில்லாத சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் கைகுலுக்கும் நாட்கள் நெருங்கி வருகின்றன எனவும், உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லாத சந்திரபாபு, லோகேஷ், பவன், ஷர்மிளா ஆகியோர் 2024 தேர்தலுக்குப் பிறகு ஹைதராபாத் மாநில மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சர்மிளா மட்டுமல்ல, பிரச்சாரம் செய்தவர் தேர்தலுக்குப் பிறகு பூஜ்ஜியமாகி விடுவர் எனவும், ஜெகன் மோகன் ரெட்டிஒரு சிங்கம் தனியாக வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 30 Jan 2024 6:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்