/* */

திருவள்ளூரில் மின்சார ரயிலில் புகையைக் கண்டவுடன் பயணிகள் இறங்கி ஓட்டம்

Electric Train Smoke Passengers Alert திருவள்ளூர் அருகே மின்சார பயணிகள் ரயில் திடீரென வெளியேறிய புகையால் ரயில் நிறுத்தப்பட்டது இதனை கண்ட பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் மின்சார ரயிலில் புகையைக்    கண்டவுடன் பயணிகள் இறங்கி ஓட்டம்
X

மின்சார ரயிலின் பிரேக் வைண்டிங் பாக்ஸ் இதிலிருந்துதான் புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Electric Train Smoke Passengers Alert

திருவள்ளூர் அருகே வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார பயணிகள் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் பிரேக் வைன்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கிஓட்டம் பிடித்தனர்.இதனால் 20 நிமிடங்கள் ரயில்கள் காலதாமதமாக சென்றன.

வேலூர் மாவட்டம், கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார பயணிகள் ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது ரயில் திருவள்ளூர் அருகே செஞ்சிபனம்பாக்கம் மற்றும் கடம்பத்தூர் இடையே வந்து கொண்டிருந்த போது திடீரென கார்டு இருக்கும் கடைசி பெட்டியின் அடியில் பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை வந்துள்ளது.இதனைக் கண்ட கார்டு(Guard) உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் அளித்து ரயிலை நிறுத்தப்பட்டது

Electric Train Smoke Passengers Alert


மின்சார ரயிலின் பிரேக் வைண்டிங் பாக்சிலிருந்து புகை வெளிவந்ததால் நிறுத்த்தி செக் செய்யும் ரயில்வே பணியாளர்.

பெட்டியில் இருந்த பயணிகள் புகை வருவதைக் கண்டு அலறி அடித்து இறங்கி ஓடிய நிலையில் கார்டு(Guard) இறங்கி வந்து பார்த்த போது கடைசி பெட்டியின் அடியில் புகை வருவதை கண்டு ரயிலில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் அனைத்து பெட்டியிலும் அணைக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.இதனைதொடர்ந்து வழக்கமாக செல்லும் வேகத்தை விட ரயில் வேகம் குறைத்து மெதுவாக இயக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இதனிடையே பதற்றமான சூழலில் காணப்பட்ட பயணிகளிடம் கார்டு தெரிவித்ததையடுத்து மீண்டும் ரயிலுக்குள் ஏறி பயணித்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது பிரேக் வைண்டிங் பாக்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சக்கரம் சுற்றாமல் நின்று விடும் எனவும், இதனால் சக்கரத்திற்கும் பிரேக்கிற்கும் உராய்வு ஏற்பட்டுள்ள புகை தான் எனவும் அதை சரி செய்து விடலாம் எனவும் தற்போது மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக ரயிலின் பின்னால் வந்த அடுத்த புறநகர் ரயில்கள் அனைத்தும் 20.நிமிடம் காலதாமதமாகச் செல்கின்றன. இந்த சிறிய சம்பவத்தால் பயணிகள் இடையே பதற்றமும், பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Updated On: 13 Feb 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்