பணி நீக்கம் செய்த நிர்வாகத்தைக் கண்டித்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

பணி நீக்கம் செய்த நிர்வாகத்தைக் கண்டித்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
X

மீஞ்சூர் அருகே 40 நிரந்தர தொழிலாளர்கள் பணி நீக்கத்திற்காக நிர்வாகத்தினரை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Employers Dismiss Against Agitation மீஞ்சூர் அருகே தொழிற்சாலையில் 40 நிரந்தர தொழிலாளிகளை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Employers Dismiss Against Agitation

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை பகுதியில் அமைந்துள்ளது

ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அமைந்துள்ளது,இதில் கண்டெய்னர் பெட்டகங்களை இறக்குமதி,ஏற்றுமதி, பணியை செய்து வருகிறது இதில் மொத்தம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என 250 க்கும்மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர், இந்நிலையில் நிரந்தர தொழிலாளர்களாக பணி புரியும் 40 ஊழியர்கள் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தொழிற்சாலையின் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர், அவர்கள் கூறுகையில் நாங்கள் இந்த தொழிற்சாலையில் கடந்த17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகவும்தற்போது இத்தொழிற்சாலையை மூடப்போவதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் எங்களை பணியை விட்டு நிறுத்தி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அதற்கான இழப்பீடு தொகையாக பணியாளர்களின் பணி மற்றும் பணிகாலத்திற்கு ஏற்ப பத்து இலட்சம் முதல்15 இலட்சம் வரை வழங்கப்பட உள்ளதாகவும் விரைவில் வீடுதேடி அதற்கான கடிதம் மற்றும் காசோலை வந்து சேரும் என நிர்வாகத்தினர் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் எதிர்பார்த்த தொகை வழங்காமல் ஆளுக்கு ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் மட்டுமே வழங்கி உள்ளனர்.இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வளவுதான் கொடுக்க முடியும் என கைவிரித்துள்ளனர்.17,15 ஆண்டுகள் கம்பெனிக்கு பணியாற்றிய நிலையில் மேற்படி குடும்பத்தை நடத்தவும்,வேறு பணியை தேடிக் கொள்ளவும் இத்தொகை போதாது என கூறி கம்பெனியை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளான மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயவேலு,உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கதிர்வேலு, வழக்கறிஞர் கனகசபை, உள்ளிட்டவர்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் அவர்களுடன் விசிக பொறுப்பாளர்கள் கோபிநயினார், வாசு, அபுபக்கர்,சிவராஜ், சமூக ஆர்வலர் லோகநாதன் என்டிஇசிஎல்.பிரபாகரன்உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story