திருவள்ளூர் அருகே பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.
Patta Requested Application To Collector
திருவள்ளூர் அருகே வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமம் பெரிய தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1968, 1987, 2008 அரசாங்கத்தால் அனுபவப்பட்டா வழங்கப்பட்டது. இந்த அனுபவ பட்டா இந்த பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு மட்டும் கிராம கணக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதி பேருக்கு கிராம கணக்குகளில் பதிவு செய்யப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரித்து அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவர் ஜி. மகா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் ஆகியோர் தலைமையில் நரசிங்கபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu