/* */

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள் போட்ட மனு

தொழுவூர்ஊராட்சியில் புள்ள பூங்காவை சீர் செய்யக்கோரி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள் போட்ட மனு
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் மனு போட்ட இளைஞர்.

திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் பொது மக்கள் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சியில் சுமார் 3.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகரில் அம்மா விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது.


இந்த பூங்காவை தொழுவூர் கிராம பொதுமக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராம மக்களும் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கே சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கு வாலிபால்கள் திடல், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு பெரியோர்கள் நடைபயிற்சி செய்வதற்கும், கராத்தே மற்றும் யோகா வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் பூங்காவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அவை கடிப்பதால் டெங்கு, மர்ம காய்ச்சல் போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால்

இந்த விளையாட்டுப் பூங்காவை உடனடியாக சீரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 100 க்கும் மேற்பட்ட தொழுவூர் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள பூங்காவை சீர் செய்து தர வேண்டும் என கோரி எழுதப்பட்டு இருந்த மனுவை போட்டுவிட்டு சென்றனர்.

Updated On: 17 April 2024 5:38 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்