மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழப்பு நடவடிக்கை ,இழப்பீடு வழங்க சாலை மறியல்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்.
Public Demanded Compensation And Action
சோழவரம் அருகே மோட்டார் பம்ப்செட்டில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம். பம்செட் உரிமையாளர், மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறுவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சோழவரம் அடுத்த ஞாயிறு கண்ணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் இரு மகன்கள் விஷ்வா (12), சூர்யா (10). இவர்கள் கடந்த 16ஆம் தேதி விவசாய நிலம் மற்றும் பம்ப்செட் அருகே பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Public Demanded Compensation And Action
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையும்,இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான பம்ப்செட் உரிமையாளர், மின்சார வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணமும் வழங்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வருவாய்த்துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறுவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu