/* */

ஆனந்தவல்லி சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலின் தெப்பத் திருவிழா

Temple Theppa Thiruvizha திருக்கண்டலம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலின் 18-ஆம் ஆண்டு மாசி மாத தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

ஆனந்தவல்லி சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவிலின் தெப்பத் திருவிழா
X

மாசி மாத  தெப்ப உற்சவத்தையொட்டி சுவாமி திருவீதி உலா நடந்தது. 

Temple Theppa Thiruvizha

பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோவிலின் மாசி மாத தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Temple Theppa Thiruvizha


திருக்கல்யாண உற்சவ கோலத்தில் சுவாமி ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலம் ஆகும் இங்குள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்ததாகும் இக்கோவிலில்18-ஆண்டு மாசி மாத தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 22.தேதி வியாழக்கிழமை மாலை சுந்தர விநாயகர்,முருகன் வள்ளி, தெய்வான, உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு பால், தயிர், சந்தனம், மஞ்சள், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்கள் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து அன்று மாலை திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 23.ம் தேதி அன்று சுக்கிர வள்ளி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை அடுத்து நேற்று 24.ம் தேதி ஆலய வளாகத்தில் சிவ பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

Temple Theppa Thiruvizha


மாசி தெப்பத்திருவிழாவையொட்டி கோயில் தெப்பக்குளம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்கண்டலம் கிராமத்திற்கு உட்பட்ட மடவிளாகம் கிராமத்திலிருந்து பொதுமக்கள் தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்களை மேல தாளங்கள் முழங்க ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.இதனைத் தொடர்ந்து சோமசுந்தரம் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர் கோவில் வளாகத்தில் எதிரே உள்ள திருக்குளத்தில் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் வைத்து சுவாமிகள் உலா வந்தன. இந்தத் திருவிழாவை காண சென்னை, திருவள்ளூர், மற்றும் திருக்கண்டலம் சுற்று கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, தண்டலம், சூளைமேனி, செங்குன்றம்,சோழவரம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Temple Theppa Thiruvizha


திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோவிலின் மாசி மாத தெப்ப திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் கூட்டம்.

கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஏற்பாட்டில் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கலந்துகொண்டு 3000 பேருக்கு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவருடன் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்திய வேலு, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், மோகன், குப்பன், குமார், டெய்லி, சம்பத்குமார், ஜெய்சங்கர், கட்சி நிர்வாகிகளும் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் மற்றும் திருக்கண்டலம் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 25 Feb 2024 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்