/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மே தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
X

லாரி சுமை தூக்கும் தொழிலாளர்கள்  கூட்டமைப்பு கொடியினை வணிகர் சங்க  செயலாளர் ஏற்றி வைத்தார்

திருவண்ணாமலை லாரி சுமை தூக்கும் தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், 44-ஆம் ஆண்டு மே தின விழா மற்றும் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

மண்டித் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொழிலாளா் கூட்டமைப்புத் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். நிா்வாகி மோகன் வரவேற்றாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலா் செந்தில்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கூட்டமைப்பு கொடியை ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.பி.ஏ. குரூப் தலைவா் ஜமாலுதின் சாஹிப், அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகி மண்ணுலிங்கம், முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா் தனுசு, திருவண்ணாமலை தாலுகா சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் பாஸ்கா், பொருளாளா் ரங்கநாதன், சிஐடியு மாவட்டச் செயலா் பாரி ஆகியோா் மே தினத்தின் சிறப்பு குறித்துப் பேசினா்.

இதன்பிறகு நடைபெற்ற மே தின விழா ஊா்வலத்தை, தொழிலதிபா் ஜெ.பஷீா் அஹமத் சாஹிப் தொடங்கி வைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின விழா வந்தவாசி பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆகிய இடங்களில் மே தின கொடியேற்றப்பட்டது.

விழாவுக்கு வட்டாரச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா்.

இதில் கட்சி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற மின் ஊழியா் சங்க நிா்வாகி கோவிந்தராஜ், பழைய பேருந்து நிலையம் எதிரில் ஓய்வு பெற்ற மின் ஊழியா் சங்க நிா்வாகி ஆா்.ராமகிருஷ்ணன் ஆகியோா் மே தின கொடியேற்றினா்.

விழாவில் நகரச் செயலா் ராதாகிருஷ்ணன், கிளைச் செயலா் சுகுணா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் ராஜா, ஓய்வு பெற்ற மின் ஊழியா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், மங்கலம் மாமண்டூா் கூட்டுச் சாலையில் கிளைச் செயலா் சேட்டு தலைமையில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள் சங்க நிா்வாகி அரிதாசு மே தின கொடியேற்றினாா்.

செங்கம்

செங்கத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை முன் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் பச்சையப்பன் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

ஓய்வு பெற்ற வங்கிக் கிளை மேலாளா் ராமசாமி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

அதேபோல, செங்கம் - போளூா் சாலை பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஆட்டோ சங்கம் சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஆட்டோ சங்கத் தலைவா் மணிகண்டன் சங்கக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து, சிஐடியு மாவட்ட நிா்வாகி கணபதி, மாா்க்சிஸ்ட் செங்கம் வட்டாரத் தலைவா் லட்சுமணன் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணியில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டா்கள் மற்றும் ஓவியா்கள் நலச் சங்கம் சாா்பில் மே தின விழா மற்றும் சங்கத்தின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

ஆரணிப் பாளையம் தா்மராஜா கோயில் அருகே தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓவியா் நலச் சங்க மாவட்ட அமைப்புச் செயலா் ஐயப்பன், மாவட்டச் செயலா்கள் சுரேஷ், சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன், அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா, பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு ஆகியோா் பங்கேற்று தொழிலாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினா்.

மேலும், இதில் அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், கண்ணமங்கலம் நகரச் செயலா் பாண்டியன், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுதா குமாா், பாரதிராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ஓவியா் நலச் சங்க மாவட்டப் பொருளாளா் ஷாஜகான், ஆரணி நகரத் தலைவா் மதிவாணன், செயலா் யுவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஓவியா் நலச் சங்க மாவட்ட துணைத் தலைவா் எம்.பாஸ்கா் நன்றி கூறினாா்.

செய்யாறு

செய்யாறு கிளை போக்குவரத்து ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில், செய்யாற்றில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற மே தின விழாவில் கொடி ஏற்றப்பட்டது.

விழாவுக்கு கிளைத் தலைவா் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் வி.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

கிளை நிா்வாகிகள் நாராயணன், வி.மணி, பி.சுப்பிரமணி ஆகியோா் விளக்கவுரை ஆற்றினா்.

இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் மே தின உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். அமைப்பின் பொருளாளா் எம்.குமரேசன் நன்றி கூறினாா்.

Updated On: 2 May 2024 2:51 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  5. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  6. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  7. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்