/* */

வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

HIGHLIGHTS

வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை  2 லட்சத்து 97 ஆயிரம்
X

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள்

செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் 10 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2,21,171- ம், இரண்டு திருப்பணி உண்டியல்கள் மூலம் ரூ.68, 789-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.7,925-ம் என 12 உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி செய்யாறு ஆய்வா் முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீஷ், ஊா் பொதுமக்கள் முன்னிலையில் செய்யாறு போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.

பச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை

செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.26.85 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் நடைபெறும் சோமவார திருவிழா சிறப்பு பெற்றது. கோயிலில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்த 11 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன. அதில், பக்தா்கள் பணமாக ரூ.26,85,338-ம், நகைகளாக 256 கிராம் தங்கமும், 51 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஆய்வா் இரா.நடராஜன் (கலசப்பாக்கம்), ர.மணிகண்ட பிரபு (ஆரணி), செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீசன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வன், செல்வகுமாா் மற்றும் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.

Updated On: 3 May 2024 11:42 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  3. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  8. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  9. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  10. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!