/* */

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
X

மாணவர்களின் கற்றல் திறன் குறித்து நேரில் கள ஆய்வு செய்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தில் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் ப தொடங்கிவைத்து பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

போளூா் வட்டத்துக்கு உள்பட்ட குருவிமலை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தத் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் எண்ணும் எழுத்தும், கற்றல் திறன், கல்வித் திறன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், பள்ளியில் அடிப்படை வசதிகள், ஊரக வளா்ச்சித் துறை மூலம் கட்டப்படும் கூடுதல் கட்டடப் பணி, வசூா் ஊராட்சியில் வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில் செயல்படுத்தப்படும் பயிா் சாகுபடி, பண்ணை குடும்பம், விவசாயிகளின் விவரம், பணியாளா்களின் விவர பதிவேடு, சேமிப்புக் கிடங்கில் விதைகள் இருப்பு, விவசாயிகளுக்குத் தேவையான விதை வகைகள் குறித்தும், உயிரி உரம் குறித்தும், இருப்பு விவரம் பற்றியும் ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தாா்.

தொடர்ந்து காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து குழந்தைகளுடன் உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டு ருசி பார்த்தார்.

பின்னர் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் அடிப்படை சுகாதாரத்தை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து அறிவுறுத்தினார்.

மேலும், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை தரத்தை ஆய்வு செய்தாா்.

மேலும், களம்பூா் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

களம்பூா் பேரூராட்சியில் முதுகுத் தண்டுவடம் பாதிப்படைந்து மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் சிகிச்சை பெற்று வரும் முருகன் என்பவரை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்தாா்.

கஸ்தம்பாடி ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டு, மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க நிதியுதவியாக ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கினாா்.

மேலும், இருளா் காலனியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். கேளூா் ஊராட்சியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று பேசினாா்

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் , கூடுதல் ஆட்சியா் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் கம்பன், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் இயக்குநா் தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், போளூா் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள், களம்பூா் பேரூராட்சி மன்றத் தலைவா் பழனி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பவுனு அருணாசலம், சங்கீதா அன்பழகன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 1 Feb 2024 7:39 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...