/* */

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் வார்டு சபா கூட்டம்

Grama Sabha Meet சேத்துப்பட்டு பேரூராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18   வார்டுகளிலும் வார்டு சபா கூட்டம்
X

சேத்துப்பட்டு பேரூராட்சியில்  நடைபெற்ற கிராம சபா கூட்டம்

Grama Sabha Meet

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் வார்டு சபா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பகுதி மக்கள் தங்களுடைய குறைகளை பேரூராட்சி தலைவர் சுதா முருகனிடம் தெரிவித்தனர்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வார்டு சபா கூட்டம் 18 வார்டுகளிலும் நடைபெற்றது. ஆட்சி மன்ற தலைவர் சுதா முருகன், வார்டு சபா கூட்டத்தில் கலந்துகொண்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

3வது வார்டு சபா கூட்டத்தில், தனுஸ்ரீ நகர் பகுதி மக்கள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கையான கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், வார்டு சபா கூட்டத்தில் மக்கள் கூறிய கருத்துக்களை ஏற்று படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படும் என பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், செயல் அலுவலர் ஆனந்தன், மூத்த உறுப்பினர் திமுக நகர செயலாளர் முருகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டில் நகர திமுக கமிட்டி ஆலோசனை கூட்டம்

சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

சேத்துப்பட்டு ஆரணி சபையில் உள்ள ஜெய்ரமேஷ் திருமண மண்டபத்தில், சேத்துப்பட்டு நகர திமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் ஜெயந்தி ராமகிருஷ்ணன், வேளாங்கண்ணன், நகர பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் புனிதா பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி தம்பி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் கலந்துகொண்டு, சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 19 பூத் கமிட்டி முகவர்களுக்கு வாக்காளர் விவர பட்டியலை வழங்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் 19 பூத் கமிட்டி முகவர்கள் இன்று முதலே வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் சேகரிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என பேசினார்.

Updated On: 11 Dec 2023 6:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...