/* */

தீபத் திருவிழா பணி; ஊழியர்களை கௌரவித்த அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் தீபத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

தீபத் திருவிழா பணி; ஊழியர்களை கௌரவித்த அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம்
X

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பிச்சகர் விஜயகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசினை வழங்கிய இணை ஆணையர் ஜோதி,உடன் திருக்கோயில் மேலாளர் செந்தில்,அறங்காவலர் குழுவினர்.

தீபத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி கௌரவித்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் ஜோதி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக்கூடியதும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று, நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவரையின் முன்பு பரணி தீபமும் சாதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

சிறப்புமிக்க தீபத் திருவிழாவிற்காக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தல், பக்தர்களை வரிசையில் செல்ல சரி செய்தல், திருக்கோயில் தூய்மையாக வைத்திருத்தல், பக்தர்களுக்கு தேவையான குடி தண்ணீர், மோர் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குதல், சுவாமி அம்பாள் வீதி உலா வரும் வாகனங்களை சரி செய்தல், சுவாமி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் சரியான நேரத்திற்கு மாடவீதியில் வளம் வரச் செய்தல், மின் அலங்கார பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திருக்கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிலையில் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார்கள், அலுவலக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை கௌரவிக்கும் வகையில் திருக்கோவிலில் உள்ள கலையரங்கத்தில் பாராட்டு சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளையும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி வழங்கி ஊழியர்களை கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், ராம பெருமாள், மீனாட்சி சுந்தரம், கோவில் மேலாளர் செந்தில், கோவில் பிச்சகர் விஜயகுமார், கோவில் சிவாச்சாரியார்கள் ,மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2023 6:39 AM GMT

Related News