/* */

சாலையோர காய்கறி கடைகளால் உழவர் சந்தை வியாபாரம் முற்றிலும் பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருவண்ணாமலையில் சாலையோரங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக உழவர் சந்தை விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சாலையோர காய்கறி கடைகளால் உழவர் சந்தை வியாபாரம் முற்றிலும் பாதிப்பு: விவசாயிகள் கவலை
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உழவர் சந்தை வியாபாரிகள்

திருவண்ணாமலை: சாலையோரம் காய்கறிகள் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், உழவர் சந்தையில் வந்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழவர் சந்தை வியாபாரிகள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், சோமாசி பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், நாட்டு காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக உழவர் சந்தையில் நல்லபடியாக வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உழவர் சந்தையில் விவசாயிகள் வியாபாரம் செய்யாமல் இருந்து வந்தனர். அப்போது விவசாயிகள் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்காமல் சாலையோரங்களில் விற்பனை செய்தனர்.

இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை வேலூர் சாலையில் சாலையோரங்களில் 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளும், காந்திநகர் புறவழிச் சாலையில் சாலையோரங்களில் 40-க்கும் மேற்பட்ட கடைகளும், வேட்டவலம் சாலையில் சாலையோரம் 30-க்கும் மேற்பட்ட தற்காலிக காய்கறி கடைகளும், தண்டராம்பட்டு சாலையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறிப்பாக வேலூர் செல்லும் சாலையில் அதாவது திருவண்ணாமலை நகர பேருந்து நிலையம் அருகில் இருந்து வேங்கிகால் செல்லும் சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இடது புறத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் என வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் மாவட்ட கருவூலம் என பலதரப்பட்ட அரசு அலுவலகங்கள் வேங்கிகால் பகுதியில் அமைந்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் இந்த வேங்கிக்கால் பகுதியிலும் மற்றும் திருவண்ணாமலை நகரத்திலும் வசித்து வருவதால் அவர்கள் மாலை அலுவலகம் முடித்து திரும்பும் போது வேலூர் சாலையில் உள்ள தற்காலிக சாலையோர காய்கறி கடைகளில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எப்பொழுதுமே மாலை வேளையில் இக்கடைகளில் கூட்டம் அலைமோதுவது தற்போது வாடிக்கையாக உள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதில்லை. இதனால் உழவர் சந்தையில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு

அதனை தொடர்ந்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் சாலையோரங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , அனைவருக்கும் வியாபாரம் நடக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கையில், சாலையோரம் காய்கறிகள் , பழங்கள் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை உழவர் சந்தைக்கு வந்து வியாபாரம் செய்யச் சொல்லுங்கள் அல்லது வேங்கிக்கால் பகுதியில் உழவர் சந்தையை திறக்க வழிவகை செய்யுங்கள். சாலையோரம், வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்.

அவ்வாறு உழவர் சந்தைக்கு வந்து வியாபாரம் செய்வதால் அனைவருக்கும் வியாபாரம் நடக்கும், உழவர் சந்தை வியாபாரம் செய்யும் எங்களைப் போன்ற நேரடி விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள், எனவே இவ்விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்கள் எங்களது கஷ்டத்தை உணர்ந்து நிவர்த்தி செய்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என கூறினர்

Updated On: 21 Feb 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  2. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  7. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  8. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  9. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  10. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...